உதகைக்கு சுற்றுலா வந்த 7 பேர் சென்ற வாகனம் கல்லட்டி மலைப்பாதையில் விபத்துக்குள்ளாகியது

0
3325
உதகைக்கு சுற்றுலா வந்த 7 பேர் சென்ற வாகனம் கல்லட்டி மலைப்பாதையில் விபத்துக்குள்ளாகியது

Ooty 03 October 2018 :உதகைக்கு சுற்றுலா வந்த 7 பேர் சென்ற வாகனம் கல்லட்டி மலைப்பாதையில் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் மூன்று நாட்களுக்கு பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 30ஆம் தேதி சென்னையை சார்ந்த 7 பேர் உதகைக்கு சுற்றுலா வந்து கடந்த 1ஆம் தேதி காலை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வாகனத்தில் சென்றுள்ளனர். மீண்டும் அவர்கள் உதகை திரும்பி அவர்கள் தங்கிய ஹோட்டல் அறையை காலி செய்யாததால் சந்தேகமடைந்த ஹோட்டல் மேலாளலர் காவல் துறைக்கு தகவல் கொடுக்துள்ளார்.போலீசார் அவர்களின் செல்போனிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச்ஆப் செய்ய பட்டிருந்தது. அவர்கள் கடைசியாக பேசிய செல்போன் சிக்னலை கொண்டு உதகை அருகே உல்லத்தி செல்போன் டவரில் தொடர்பு கண்டறியப்பட்டது.

அதனடிப்படையில் நீலகிரி மாவட்ட காவல் கண்கானிப்பாளர் திருமதி. சண்முகபிரியா அவர்களின் உத்தரவின் பேரில் அவர்களை வனப்பகுதிக்குள் தேடும் பணி நடைபெற்றது. அப்போது உதகை – மசினகுடி கல்லட்டி பாதையில் 35வது கொண்டை ஊசி வளைவில் அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி 200 அடி பள்ளத்தில் விழுந்திருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக அவர்களை மீட்கும் பணியில் வனத்துறையினர் – காவல் துறையினர் – தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.இதில் விபத்து நடந்து மூன்று நாட்கள் ஆனதால் 7 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று எண்ணிய நிலையில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்னர். 5 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.-Nilgiri News

LEAVE A REPLY