எமரால்டு பகுதியை சேர்ந்த முத்து என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

0
1432
எமரால்டு பகுதியை சேர்ந்த முத்து என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

குந்தா  06 November 2018 : நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட கீழூர் பீட் மேரிலாண்ட் காப்புக்காட்டில் எமரால்டு பகுதியை சேர்ந்த முத்து(30) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .முத்து கட்டை எடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இவரது மனைவியின் ஊர் மேரிலாண்ட் கடந்த மூன்று மாத காலமாக இவர் இங்கு தான் இருந்துள்ளார் .நேற்று இரவு குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முத்து வீட்டை விட்டு சென்றுள்ளார், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அருகில் இருந்தவர்கள் முத்துவை தேடத் தொடங்கியுள்ளனர். இன்று காலை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து தெரியவந்தது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வனத்துறையினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர் .இவருக்கு 6 வயது பெண் குழந்தையும் 4 வயது ஆண் குழந்தையும் உள்ளது .இந்த சம்பவத்தால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது.-Nilgiri News

LEAVE A REPLY