தடுப்புக் கம்பி சரிந்து விழுந்தது விபத்துகுள்ளானது , இதில் ஒருவர் படுகாயம்

0
537
தடுப்புக் கம்பி சரிந்து விழுந்தது விபத்துகுள்ளானது , இதில் ஒருவர் படுகாயம்

Udhagamandalam 24 March 2019 : உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் லவ்டேல் சந்திப்பு பகுதில் வழக்கம் போல பணிகள் நடைப்பெற்று வந்தது. அப்போது கான்கீரிட் தளம் அமைக்க போடப்பட்டிருந்த தடுப்புக் கம்பி சரிந்து விழுந்தது விபத்துகுள்ளானது. இதில் ஒருவர் கம்பியின் நடுவே சிக்கிக்கொண்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் படுகாயமடைந்த அவரை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எந்த வித பாதுகாப்பு கவசங்களும் இல்லாததாலும் தரமற்ற பணிகளை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.-Nilgiri News

LEAVE A REPLY