கோவை துடியலூரில் 6 வயது சிறுமி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொலை செய்த சந்தோஷ் குமார் என்ற காம கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

0
999

கோவை 31 March 2019 : கோவை துடியலூரில் 6 வயது சிறுமி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொலை செய்த சந்தோஷ் குமார் என்ற காம கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். 10 தனிப்படைகள் அமைத்தும் குற்றவாளி கிடைக்காத நிலையில் துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டியும் குற்றவாளியை தேடி வந்தனர் ,இந்த நிலையில் போலீசாரிடம் சிக்கியுள்ள காம கொடூரன் சந்தோஷ் குமார் யிடம் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. மனைவியைப் பிரிந்து வாழும் சந்தோஷ்குமார் தனது பாட்டி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான். பாட்டி உயிரிழந்ததால் பாட்டியின் வீட்டுக்கு வந்திருந்த சந்தோஷ் குமார் சிறுமியை கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 25ஆம் தேதி 6 வயது சிறுமி காணாமல் போன நிலையில் 26ஆம் தேதி சிறுமி அருகே உள்ள சந்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை அனுப்பிவைத்தனர் .முதல்கட்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது .இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் சந்தோஷ்குமார்யிடம் கடந்த 4 நாட்களாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் .விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பாட்டி வீட்டின் இறுதி சடங்குக்காக வந்துள்ள சந்தோஷ் குமார் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.
யார் இந்த சந்தோஷ் குமார் ?
சந்தோஷ் குமார் வயது 34 தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவன் இன்டீரியர் வேலை செய்து கொண்டிருப்பவன் இவனுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிய நிலையில் திருமணமாகி ஒரு மாத காலத்திற்குள் மனைவி பிரிந்ததாக தெரியவருகிறது .பண்ணி மடைபகுதியில் உள்ள தன் பாட்டியின் இறுதி சடங்கிற்கு வந்த காமக்கொடூரன் சந்தோஷ் குமார் பார்வையில் அந்த குழந்தை பட்டுள்ளது உடனடியாக அந்த குழந்தையை வீட்டுக்கு வரவழைத்து வாயில் துணியை வைத்து அழுத்தி காமக்கொடூர செயலில் ஈடுபட்டான்.இந்த விஷயம் வெளியே தெரிய வரும் என்று அறிந்து குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான் . பாட்டி வீட்டிலேயே சடலமாக அந்த குழந்தையை வைத்துள்ளான். இழவு வீடு என்பதால் யாரும் குழந்தையை அங்கு தேடவில்லை .அருகில் இருந்தவர்கள் குழந்தையைக் காணோம் என பல பகுதிகளில் தேடி உள்ளனர் . விடியற்காலை 4 மணி அளவில் குழந்தையை சந்தில் வீசியுள்ளான் காமக்கொடூரன் சந்தோஷ் குமார் . -Coimbatore News

LEAVE A REPLY