சென்னையில் உலக ஜூனியர் ஸ்குவாஷ்

0
771

சென்னை: சென்னையில் உலக ஜூனியர் ஸ்குவாஷ்தொடரின் அணிகளுக்கான காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடக்கிறது. வரும் 29ம் தேதி வரை இத்தொடர் நடக்கவுள்ளது.

இத்தொடரில் ஆஸ்திரேலியா, கொலம்பியா, கனடா, செக் குடியரசு, அர்ஜென்டினா, இங்கிலாந்து, எகிப்து, பின்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, ஹாங்காங், இந்தியா, ஈரான், அயர்லாந்து உள்ளிட்ட 28 நாடுகளின் 171 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதில் இந்தியா சார்பில் 12 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்அனர். இத்தொடருக்காக தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. தனிநபர்களுக்கான முடிந்த நிலையில், அணிகளுக்கான நடக்கிறது.

LEAVE A REPLY