நீலகிரி மாவட்டம் 1818-ஆம் ஆண்டு ஜான்சலீவன் அவர்களால் கண்டறியப்பட்டது

0
338

Udhagamandalam 08 August 2018 :நீலகிரி மாவட்டம் 1818-ஆம் ஆண்டு  ஜான்சலீவன் அவர்களால் கண்டறியப்பட்டது. 1868 ஆகஸ்ட் மாதம் நீலகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிந்து புதிய மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்டது. இம்மாவட்டம் கண்டறியப்பட்டு 200 ஆண்டுகளும் தோற்றுவிக்கப்பட்டு 150 ஆண்டுகளும் நிறைவடைந்ததை தொடர்ந்து உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் எதிர்வரும் 18.08.2018 அன்று சிறப்பாக கொண்டாட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை சிறப்பாக நடத்த பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் எதிர்வரும் 09.08.2018 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் உதகை பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. அதுசமயம் பொதுமக்கள் இவ்விழா சம்பந்தமாக தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY