நேஷனல் அஜெண்டா ஃபோரம்- NAF தொடங்கி 50 நாட்கள் முடிவடைந்தது

0
309

Chennai 22 August 2018 : நேஷனல் அஜெண்டா ஃபோரம்- NAF தொடங்கி 50 நாட்கள் முடிவடைந்த நிலையில், நாடெங்கும் பேராதரவுடன் செயல்பட்டு வருகிறது. இதுவரை 52 லட்சம் மக்கள் இதில் பங்கெடுத்து உள்ளார்கள்.
இதில் 88, 000+க்கும் அதிகமான இளைஞர்கள் 311 புகழ் பெற்ற மனிதர்கள் மற்றும் 337 சிவில் சமூக அமைப்புகள் இணைந்துள்ளன. இதுவரை 4, 000 கல்லூரியில் இருந்து 88, 000+ க்கும் அதிகமான இளைஞர்கள் 6 நாடுகளில் இருந்து 311 புகழ் பெற்ற மனிதர்கள் மற்றும் நாடுமுழுவதும் உள்ள 346 மாவட்டங்களில் இருந்து 337 சிவில் சமூக அமைப்புகள் NAF அமைப்பில் இணைந்துள்ளன.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டினை அவர் சொல்லிவிட்டு சென்ற இந்தியாவின் முன் உரிமைகளை மறுபரிசீலனை செய்யும் பட்சத்தில் இந்த NAF- National Agenda Forum ஆனது உருவாக்கப்பட்டு வெற்றிநடை போட்டுகொண்டிருக்கிறது
இந்தியன் பொலிடிகல் ஆக்சன் கமிட்டி I-PAC அதன் பொறுப்பாளர்களை கொண்டு சென்னை முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள கல்லூரிகளை அடையாளம் கண்டு மாணவர்களிடையே NAF பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை அதனுள் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
சுமார் 1000+ மேற்பட்ட மாணவர்கள் இதனுள் இணைந்து பேரதரவை பெற்றுள்ளது. பாலாஜி கல்லூரி, ராமகிருஷ்ணா இன்ஜினீயரிங் கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ், வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, விவேகநந்தா கல்லூரி, மீனாக்ஷி கல்லூரிகளில் பொறுப்பாளர்கள் முகாமிட்டு மகாத்மா காந்தியின் 18- புள்ளி கட்டமைப்பை எடுத்துரைத்து மாணவர்களிடம் கலந்துரையாடியுள்ளனர்.- Chennai News

LEAVE A REPLY