கிருஷ்ணகிரியில் இருந்து உதகை பள்ளியில் படிக்கும் மகளை பார்க்க வந்தவர்களின் கார் விபத்துக்குள்ளானது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்

0
5873

கிருஷ்ணகிரியில் இருந்து உதகை பள்ளியில் படிக்கும் மகளை பார்க்க வந்தவர்களின் கார் விபத்துக்குள்ளானது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்

Ooty 01 September 2018 :கிருஷ்ணகிரியில் இருந்து ராஜசேகர் ,வரலட்சுமி ,வைஷ்ணவி மற்றும் அவர்களது குடும்ப நண்பர் சத்தியா ஆகியோர் உதகையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் மகளைப் பார்க்க வந்துள்ளனர். காட்டேரி பாலம் அருகே வந்த போது கார் நிலைதடுமாறி 300 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது . இதில் சத்தியா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மூன்று பேர் படுகாயமடைந்தனர் . தகவலறிந்து அப்பகுதி பொதுமக்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் . இறந்த சத்தியாவின் உடலை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மூன்று பேரையும் உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் . உதகை தலைமை அரசு மருத்துவமனையில் அவருகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து லவ்டேல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த விபத்தால் அப்பகுதியில் சோகம் நிலவியது.– Nilgiri News

LEAVE A REPLY