16 September 2018 : பெட்ரோல் – டீசல் விலை உயர்வு பிரச்சனைக்கு விரைவில் மத்திய அரசு தீர்வு கொண்டுவரும் என்று பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார் .பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றை கண்டு மத்திய அரசும், பா.ஜ.கவும் கவலையடைந்துள்ளது. உலகளவில் நடைபெறும் சில நிகழ்வுகளே இதற்கு காரணம்.அதாவது, அமெரிக்கா, சீனா இடையே நடைபெறும் வர்த்தக போர், அமெரிக்காவுக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சனைகளே பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு காரணமாகும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.